Thursday, 19 March 2015

ஹருகிமுரகாமி

haru

ஹருகிமுரகாமி சிறுகதைகள் பற்றிய ஒரு உரையாடலுக்கு நண்பர் விஜயமகேந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.சமீபமாக முராமியை தீவீரமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். தெளிவான புரிந்துகொள்ளலின் நிமித்தம் அவ்ரது கினோ கதையை மொழி பெயர்க்கவும் செய்திருக்கிறேன். அது வல்லினம் மின் இதழில் வந்திருக்கிறது.
அடுத்து மொழி பெயர்க்க முராமியின் Scheherazade சிறுகதையை தேர்வு செய்திருக்கிறேன்.
கதைக்கு முன் கதைக்குத் தலைப்பான  Scheherazade பற்றிய ஒரு சுவாரஸ்யமான அகதை இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் அந்த அரசன் ஒரு கன்னிப்பெண்ணை திருமணம் செய்துகொள்வான். அவள் கன்னி கழிந்த்தும் துரத்திவிடுவான்.தன் முதல்மனைவி தனக்கு துரோகம் செய்த்தற்க்கு அவன் ஆற்றும் எதிர்வினை இது.ஆயிரம் இஅரவுகள் கழிந்த பிறகு அரசனின் மந்திரியான Scheherazadeஅரசனுக்கு அறிமுகம் செய்துவைக்கப் படுகிறாள்.அரசனை அவளுக்குப் பிடித்துப் போகிறது.ஆனால் அவள் ஒரு நாள் மனிவியாகத்தான் இருக்க முடியும் என்று அவ்ள் தந்தை சொல்கிறார். தடுக்கிறார்.
தந்தையின் எதிர்ப்பை மீறி அரசனுக்கு மனைவியாகும் Scheherazade முதலிரவு முடிந்து பொழுது புலர்வத்ற்க்கு முன் பொழுதைப் போக்க தன் தங்கையிடம் அரசனுக்கு கேட்கும் விதமாக ஒரு கதையைச் சொல்லத்துவங்குகிறாள்.சுவாரஸ்யமான் அக்கதையில் அரசன் லயித்துப்போக கதையை நிறுத்துகிறாள்.அரசன் சொல்லச் சொல்கிறான்.பகல்வந்துவிடும் இரவு சொல்கிறேன் என்று Scheherazade தன் இருப்பை நீட்டித்துக் கொள்கிறாள்.இப்படியாக ஆயிரம் இரவுகள் கடக்கின்றன.ஆயிரத்து ஓராவது இரவு கதை முடியும்போது அரசனுக்கு அவள் மீது காதல் வந்துவிடுகிறது. அவள் அரசியாக அங்கீகரிக்கப் படுகிறாள்.
Scheherazade பெயரை முராமி தலைப்பாக வைத்திருக்கிறார்.கதைக்குள் அவ்ர்நிகழ்த்தும் மாயாஜாலங்களை படிக்கத்துவங்கியிருக்கிறேன்.


No comments:

Post a Comment