Saturday, 21 March 2015

ப்யணி மாத இதழில் வந்தபயணநூல்வரிசை-1



பயணப் புத்தக வரிசை
சார்லியோடு ஒரு பயணம்- ஜான் ஸ்டெய்ண்பெக்
அறிமுக்க்கட்டுரை; என்.ஜெகநாதன்
;
ஜான் ஸ்டெயின்பெக் (1902-1968) ஒரு புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். நாவல், சிறுகதை, பயணக்கட்டுரை என்று 27 புத்தகங்களை எழுதியவர்.புலிட்ஸர் மற்றும் நோபல் பரிசுகளைப் பெற்றவர். அமெரிக்க இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர்.விதி என்ற ஒன்று மனித வாழ்வில் ஏற்படுத்தும் சுழற்சி மற்றும் மனிதனுக்கு சகமனிதர்களால் இழைக்கப்படும் அநீதி பற்றியே இவரது கதைகள் இருந்தன. கற்பனையை எதார்த்தத்துடன் இணைக்கும் ஒரு வசீகர மொழி நடையைக் கொண்டிருந்தார். தன் 66 வயதில் தொடர்ந்த புகை பிடிக்கும் பழக்கத்தால் இதய நோய் வந்து இறந்தார்.

Travels with Charley In Search of America என்ற இந்த பயணப் புத்தகம் 1960-ஆம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் தன் மனைவியின்  poodle ரக நாய் சார்லியுடன் பயணம் செய்து அமெரிக்க மக்களின் வாழ்வு அவற்றின் தரம் அவர்களின் மனநிலை குறித்த தன் தனிப்பட்ட ஆர்வத்தால் எழுதினார்.எண்ணற்ற கேளவிகளோடு நிகழ்ந்த அவரது பயணம்  இன்று அமெரிக்கர்கள் எப்படி இருக்கிறார்கள்.அவ்ர்களின் மன நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளும் விதமாகவே இருந்தது.
தன் பயணத்திற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட அவரது பயண வண்டிக்கு Rocinante என்று பெயர் சூட்டினார்.அது அவர் அபிமானம் கொண்டிருந்த Miguel de Cervantes  -ன் கதாபாத்திரமான  Don Quixote பயணம் செய்த குதிரையின் பெயர்.நியூயார்க் மாகாணத்தின் லாங் ஐலாண்டில் துவங்கிய அவரது பயணம் அமெரிக்காவின் எல்லைப் பகுதிகளிலேயே தொடர்ந்தது.வடமேற்க்கு பசிபிக் அவருக்குப் பிரியமான கலிஃபோர்னியாவின் சலினாஸ்வேலி வழியாக அவர்  தென் பிராந்தியமான டெக்ஸாஸ் வந்தார். மீண்டும் நியூயார்க் செல்லும் போது அவரது பயணத்தின் 10,000 மைல்களைக் கடந்திருந்தார்.

அவரது குடும்பத்தினர் இந்தப் பயணம் பற்றி சொல்லிய விஷய்ங்கள் அதிர்ச்சிகரமாக இருந்தது. இதய நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டெய்ண்பெக் எந்த நேரத்திலும் மரணம் த்ன் இருப்பை முடித்துக் கொள்ளும் என்று  உணர்ந்து கொண்டார்.  தன் நாட்டை தான் நேசித்த தன் நாட்டு மனிதர்களைக் கடைசியாகக் காணும் பேராவலிலேயே இந்தப் பயணத்தை மேற்கொண்டார் என்பதே அது.
தேசமெங்கும் அலந்து திரிவதில் தன்க்கிருந்த ஆர்வம் குறித்து இந்தப்புத்தகத்தின் ஆரம்பத்திலேயே அவ்ர் குறிப்பிடுகிறார்.நியூயார்க் நகரில் வாழத்துவங்க்கி இருபது வருடங்கள் க்ழித்து, அவர் இந்தப்பயணத்தை துவங்கிய 1960 –ஆம் ஆண்டில் அவர் அறுபது வயதைக் கடந்திருந்தார்.அவர் வாழ்வின் கடைசி அத்தியாயம் அது.அமெரிக்கா பற்றிதெரியாமலும் அமெரிக்கர்பற்றி அறியாமலும் எழுதப்படும் அமெரிக்க எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் கிரிமினல்கள் என்று குறிப்பிட்டார்.தன் பயணவண்டியில் கடைசி நேரத்தில் தன் மனைவியின் 10 வயது நாய் சார்லியையும் இணைத்துக் கொண்டார்.தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அது உதவியது என்று சொன்னார். Labor Day  என்று அழைக்கப்படும் செப்டம்பர் மாத முதல் திங்கட்கிழமைக்குப் பின்னால் லாங் ஐலண்டின் சாக் துறைமுகத்த்லிருந்து தன் பயணத்தை துவங்க திட்டமிட்டிருந்த போது டோனா என்ற புயல் லாங் ஐலண்டை கொடூரமாக தாக்கியது. அவரது படகு காப்பாற்றப்பட்டது. ஆனாலும்  தன் பயணத்திற்காக கொண்டிருந்த துணிவு, மற்றும் தன்னம்பிக்கையை அவர் சிறிதும் இழக்கவில்லை.

பெரிய படகில் லாங் ஐலண்டிலிருந்து நியூஇங்லாண்ட் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாகாணமான கனெக்டிகட்டுக்கு(Connecticut) செல்லும் வழியில் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப் பட்டிருப்பதைக் கண்டார். அவற்றில் பெரும்பாலானவைகள் அணுசக்திக் கப்பல்கள். மாலுமிகளிடம் பேச்சுக் கொடுத்த அவர், அவர்கள், எதிர்காலத்தின் எல்லா நவீன வசதிகளும் தங்களிடமிருக்கும் பெருமையில் இருப்பதைக் கண்டார். நவீன யுகத்தின் வேகத்தையும் அவற்றின் மாற்றத்தையும் அவற்றின் நிலையின்மையையும், அரசியல் மாற்றங்களையும் பற்றியும் குறிப்பிட்ட அவர் அமெரிக்க பெரு நகரங்களின் வீணடிப்பு மனநிலையக் குறை சொன்னார். அதன் விளைவுதான் நம் வாழ்வு எல்லா தளங்களிலும் இயற்க்கைக்கு மாறான ஒருவித vaazvu பேக்கேஜ் நிலைக்கு தள்ளப் பட்டு விட்டது என்றார்.

அதன் பின் அவர் நியூ இங்கிலாந்தின் விவசாயியுடன் பேசினார். இருவருக்குமே நிரந்தரமற்ற எதிர்காலம் பற்றிய பயம் இருந்தது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.நிக்ஸனுக்கும் கென்னடிக்கும் இடையே நிகழ்ந்த தேர்தல் போட்டி பற்றியும் இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.சாலையோர உணவுவிடுதியில் சாப்பிடும் ஸ்டெய்ண்பெக் வானொலி நிகழ்ச்சிகளைக் கவனிக்கிறார். "If 'Teen-Age Angel'  என்ற பாப் கலாச்சாரப்பாடல்கள் பல வானொலிநிலையங்களில் முதல் இரண்டு இடங்களில் இருந்ததைக் குறிப்பிடும் அவர் வானொலி அல்லது அது போன்ற தொடர்பு சாதனங்கள் மனிதர்களை ஒருங்கிணைக்க முடியும் என்றார்.
அவர் வடக்கு நோக்கி Maine விற்க்குப் பயணப் பட்டார்.குளிர்காலத்தில் பூட்டப்பட்டு,கோடைகாலத்தில் மட்டும் திறந்திருக்கும் கடைகள் அங்கு திறந்திருப்பதைக் கண்டார்.அவற்றில் பெரும்பான்மையானவை கலைப் பொருட்கள் விற்கும் கடைகள்.சில பொருட்களை வாங்க நினைக்கிறார், அவ்ர் வீட்டில் இது போன்று வாங்கிக் குவித்த பொருட்கள் அறை முழுதும் நிரம்பியிருப்பது ஞாபகம் வருகிறது அவருக்கு. Bangor என்ற ஊருக்கு வெளியே இருந்த சிறிய ரெஸ்டாரெண்ட் ஒன்றின் வெளியே உணவ்ருந்த நிற்க்கும்போது அடுத்தவர்களின் வாழ்வுபற்றிய கசப்பான எண்ணங்கள் நம் சொந்த வாழ்வின் நல்ல தருணங்களைப் பாதிக்கவல்லது என்று அவ்ருக்குத் தோன்றியது.
அதன்பின்னால் Maine நகரிலுள்ள Deer Isle சென்றார். எலிஸ்பெத் ஓடிஸ் என்ற அவரது ஏஜண்ட் ஒவ்வொரு கோடைக்காலத்திலும் செல்லும் இடம் அது.அது பற்றி அவ்ர் அடிக்கடி பேசவும் கேட்டிருந்தார்.ஆனால் ஒரு முறைகூட ஏன் அந்த இடம் பிடித்தமான இடமாக இருக்கிறது என்று அவ்ரால சரியாகச் சொல்லியிருக்க முடியவில்லை
Deer Isle –க்கு பயணப்படும்போது திடீரென வண்டியை நிறுத்தி அங்கிருந்தவர்களிடம் வழி கேட்டார். ஆனால் அங்கிருப்பவர்களிடம் வழி கேட்கக் கூடாதென்றும் அவர்கள் தவறாக வழிகாட்டிவிடுவார்கள் என்று உள்ளூர்க்காரர்கள் சொல்லவும் கேட்டார். Deer Isle – ல் ஒரு வீட்டில் இரவுத்தங்கலுக்கு ஏற்பாடாகியிருந்தது.சுத்தமான கடல் நீரோட்டத்தில் வளர்க்கபட்ட லாப்ஸ்டர் உணவு அவ்ருக்கு கிடைத்தது. அதன் பின் வடக்கு Maine. அங்கு பிரென்ஞ் மொழி பேசும் உருளைக்கிழங்கு எடுக்கும் குடியேறிகளோடு இரவு தங்கினார்.அவர்களின் வாழ்வையும் துக்கங்களையும் சந்தோஷங்களையும்
அவ்ர் தன்"The Grapes of Wrath," நாவலில் பதிவு செய்திருந்தார்.
அவர் அதன் பின் நியூயார்க், நாயகரா,பஃபல்லோ செல்ல திட்டமிட்டார். நியூயார்க்கின் மேற்க்குப்பகுதி வழியாக பென்சில்வேனியா,ஓஹியோ,இண்டியாணா பகுதிகள் வழியே செல்ல வேண்டியிருந்தது.waaநயகராவிலிருந்து கனடாவின் எல்லையைக் கடந்து டெட்ராய்ட் நகருக்குவரத் திட்டமிட்டார்.அப்படி வந்தால் சீக்கிரத்தில் சென்றுவிடலாம் என்பது அவ்ர் திட்டம். ஆனால் அவரது நாய்க்கு நோய்தடுப்பு ஊசிகள்
போடப்பட்டிருக்கும் சான்றிதழ்கள் இல்லாததால் அமெரிக்க எல்லை அதிகாரிகளுடன் அவர் விவாதம் செய்ய வேண்டியதாயிற்று. மனிதர்களை சாதாரணமாக மதிக்கும் அரசாங்கத்தின் நடைமுறைகளை அவர் குறை சொன்னார். அதிகாரிகளுக்குத் தேவை ஒரு சான்றிதழ், சான்றிதழில் ஒரு முத்திரை.உண்மை எப்படியிருந்தாலும் பரவாயில்லையா/ என்று விவாதித்தார்.
தொடர்ந்த அவர் பயணத்தில் எங்கு சென்றாலும் யாரைப் பார்த்தாலும் வெவ்வேறு குணங்களில், வெவ்வேறு நம்பிக்கைகளில் இருப்பதைக் கண்டார்.ஒரு மனிதரோடு இன்னொரு மனிதர் ந்ட்புறவு கொள்வதில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொருவிதமான மனநிலையிலிருந்தது அவருக்கு ஆச்சர்யம் தந்தது.
மத்திய மேற்குப்பகுதிகளில் அவ்ர் பிரயாணம் செய்த போது மாநிலத்துக்கு மாநிலம் மக்கள் தொகை வேக மாக வளர்ந்து வருவதையும் Youngstown, Cleveland, Akron, Toledo, South Bend and Gary போன்ற சிறு ஊர்கள் நகரங்களாகிக் கொண்டிருப்பதையும் கண்டார். சாலைகளில் போக்குவரத்து அதிகரித்திருப்பதையும் வேகம் அவசரம் அதிகமாகியிருப்பதையும், பிறந்த ஊர்களை விட்டு தெர்ந்தெடுத்த ஊர்களுக்குச் செல்லும் மனிதர்கள் செல்லும் மனநிலை அதிகரித்திருப்பதையும் கண்டார். New England பகுதிகளிலுள்ள மக்கள் புதிய மனிதனின் வருகையை ஆர்வமின்றிப் பார்த்தார்கள். அவ்னோடு பேசவோ பழகவோ விரும்பவில்லை. அவனாக வந்து பேசட்டும் என்று காத்திருந்தார்கள். Midwestern நகரங்களில் புதிதாக வருபவர்கள் மூலம் புதிதாக ஒரு விஷயத்தை புதிதான ஒரு கண்டுபிடிப்பை புதிதான எதாவது ஒன்றை அறியும் முயற்ச்சியில் மனிதர்கள் இருந்தார்கள். அவ்ர்கள் வாழ்வு அப்படி பயணியாக வந்த எதோ ஒருவர் மூலமாக மேம்பட்டிருப்பதை அவ்ர்கள் அறிந்திருந்தார்கள்.ஒரு பயணியாக அந்த மனநிலைகள் அவருக்கு ஆச்சர்யம் தந்தது.
தொடர்ந்த பயணத்தில் தானியங்கி சூப், காபி இயந்திரங்கள் புழங்கத்துவங்கியிருப்பதையும்,வாழ்வை இயந்திரங்கள் ஆக்கிரமிக்கத்துவங்கியிருப்பதையும் கண்டார்.அவசரகதியில், உடனடி நிவாரணம் வேண்டும் வாழ்வை அமெரிக்க மனங்கள் விரும்பத்துவங்கியிருப்பது அவ்ருக்கு கவலை தந்தது
அவர் Wisconsin  மற்றும் Minnesota வழியாக North Dakota வந்தார்.அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற St. Paul –லின் நெடுஞ்சாலையான Highway 10 –ல்  பயணம் செய்தார்.அமெரிக்காமீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் தப்பிக்கும் மார்க்கமாக அந்தவிரைவுச்சாலை திட்டமிடப்பட்டிருந்தது. அந்த சாலையை பயத்தால் திட்டமிடப்பட்ட சாலை என்று அழைத்தார். அது மட்டுமில்லாமல் பல தளங்களில் அமெரிக்க வாழ்வை பயம் கவ்வியிருப்பதை, எது என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாத பயமொன்றிலிருந்து தப்ப அமெரிக்கர்கள் விரைந்து கொண்டிருப்பதாகவே அவர் உணர்ந்தார். St. Paul –லிலிருந்து Sauk Centre சென்றார். அது எழுத்தாளர் Sinclair Lewis பிறந்த ஊர். அமெரிக்க எழுத்தாளர்களில் முதன் முதலில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அவ்ர். ஸ்டெய்ண்பெக் சந்தித்த மனிதர்கள் Sinclair Lewis யார் என்பதையே அறிந்திருக்கவில்லை என்பது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
 உணவு நேரங்களில் அவர் சந்தித்த மனிதர்கள் அமெரிக்க மக்கள் தங்கள் கலாச்சாரம் பற்றிய நுண்ணுணர்வு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வையே அவ்ருக்குத் தந்தார்கள். சுவைக்கு விலை கொடுப்பதை விட அமெரிக்கர்கள் சுத்தத்திற்க்கு விலை கொடுக்க வேண்டும், சுகாதாரக் கேடுகளால்தான் பல் அமெரிக்கர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். அமெரிக்கர்கள் சொகுசாக வாழ விரும்புவதும் இந்தப் பயணத்தில் அவர் உணர்ந்த ஒன்றாக இருந்தது. பெரு முயற்ச்சிகளிலோ,புரட்சிகரமாக ஒன்றச் செய்வதிலோ அவர்கள் ஏன் விருப்பமற்றுப் போனார்கள், இந்த இரண்டும்தான் ஒரு நாட்டை சிறந்த நாடாக மாற்றும் காரணிகள் என்றார்.
North Dakota வழியாக Montana வந்த அவர், எனக்கு மிகவும் பிடித்த நான் நேசிக்கும் பகுதி Montana என்றார். அதற்க்கு அவர் சொன்ன காரணம், அந்தப் பகுதிதான் டெலிவிஷனால் சீரழிக்கப்படாத பகுதி என்பது.அன்பான நிறைவான மனிதர்களை இங்கு கண்டேன்.திகிலூட்டும் பரபரப்பு இங்கு காணப்படவே இல்லை என்றார்.
1876-  ஜூன் மாதத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் Northern Cheyenne,Arapaho பழங்குடியினருக்கும் யுத்தம் நிகழ்ந்த இடத்தைப் பார்த்தார். அந்த யுத்தம் பற்றிய நாவல் அவர் எழுதியிருக்கிறார்.பின் அவர் அங்கிருந்து Yellowstone National Park வந்தார். அங்கு இயற்கையின் அற்புதங்கள் பாதுக்காகப் படுவதாகச் சொல்லியபோது  Disneyland –ஐ விட இனி என்ன அற்புதம் அமெரிக்காவிலிருக்க்ப்போகிறது என்று துயரமாகச் சொன்னார்.பூங்காவிலிருந்த போது சார்லி விடாமல் குறைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். காரணம் புரியவில்லை. சற்று நேரத்தில் ஒரு கரடி தூரத்தில் தெரிந்தது.
Seattle செல்லும் வழியில் அவர் கொலம்பிய நதியைப் பார்த்தார். அமெரிக்க நீர் ஆதாரத்துக்காகவும், பசிபிக் சமுத்திரத்தை இணைப்பதற்க்காவும் பிரான்சிடமிருந்து 1803-ல் விலைக்கு வாங்கப்பட்டு Lewis மற்றும்Clark-க்கால் நீர்வளம் கண்டறியப்பட்ட அந்த இடம் அவருக்கு ஆச்சர்யம் தந்தது.இருபது வருடங்களில் முகமே மாறியிருந்த இடம் எதனை நோக்கிய வளர்ச்சி இது? அழிவை நோக்கியா என்ற எண்ணம் கிளர்க்கச் செய்தது.
அடர்ந்து வளர்ந்திருந்த redwood மரங்களைக் கண்டார்.அம்மரங்களருகே சுற்றித்திரிந்த இன்பத்திற்க்கு இணையாகஎதுவுமில்லை என்றார்.நீண்ட நேரம் சுற்றியும் அந்த மரங்களின் மீது சிறுநீர் கழிக்காமல் வெளியில் வந்து சிறுநீர் கழித்த நாய் சார்லிக்கு தன் நூலில் அவர் நன்றியை பதிவிட்டிருந்தார்
தான் பிறந்த Salinas Valley ப்பகுதிக்குச் சென்றார். இருபது வருடங்கள் கழித்து வாழ்வின் கடைசியாக வந்த த்ருணம் அவ்ருக்கு பால்ய நினைவுகளைக் கிளர்த்து கசிந்துருக வைத்தது. Johnny Garcia என்ற இறந்த தன் நண்பன் பற்றிய யோசனையில் அவர் இருந்தார். அந்தப் பகுதி "Steinbeck Country,"   என்று அழைக்கப் படுகிறது. அதி பிரபலமாக்கியது அவரது எழுத்துக்கள்.
முடிவாக அமெரிக்கா திசையற்று நோக்கமற்று அசுரத்தனமாக இயந்திரத்தனமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதையே தன் பயணத்தின் முடிவில் உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment